பாபா படத்தின் ரீமேக்கில் அந்த ஹீரோ தான் நடிக்கணும்! மனம் திறந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!

baba movie

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியடையும் என எதிர்பார்த்தனர். ஆனால், பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றே சொல்லவேண்டும். படம் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சற்று மாற்றம் செய்து படத்தை படக்குழுவினர் ரீ-ரிலீஸ் செய்தனர். ரீ-ரிலீஸ் செய்யும் போது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது என்றே கூறலாம். டிக்கெட் புக்கிங்கில் இருந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் சரி ஒரு புது படம் வெளியானால் எப்படி கொண்டாட்டம் இருக்கோமோ அந்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

பாபா படத்தோட என்னுடைய கேரியர் முடிந்தது…மனம் திறந்த நடிகை மனிஷா கொய்ராலா.!

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாபா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா படம் பற்றியும் படத்தின் ரீமேக் எடுத்தால் அதில் எந்த ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் என்பது பற்றியும் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் பாபா திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சியால் எடுக்கப்பட்டது. படம் எடுக்கும்போது மிகவும் விருப்பப்பட்டு எடுத்தோம்.

படம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறு வெளியீடு செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதன் பிறகு தொகுப்பாளர் பாபா படத்தை ரீமேக் செய்தால் அதில் ரஜினிக்கு பதிலாக எந்த ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பட்டையை கிளப்பும் வசூல்…லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பாபா.!

அதற்கு பதில் அளித்த சுரேஷ் கிருஷ்ணா ” தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும். அவர் ஒரு ஆன்மீகவாதியா தான் இருக்காரு அது மட்டுமின்றி எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை உள்வாங்கி கொண்டு அவர் நன்றாக நடிக்கிறார். எனவே, பாபா படத்தை ரீமேக் செய்தால் அவரை வைத்து செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், சுரேஷ் கிருஷ்ணா ஏற்கனவே தனுஷை வைத்து பரட்டை என்கிற அழகு சுந்தரம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியானது விமர்சனத்தை பெறவில்லை வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்