எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மக்களை போலவே, சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் கூட எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தான். அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து நடிப்பாலும், பல உதவிகளை செய்து நல்ல மனிதராகவும் அவர் இருந்ததால் எம்.ஜி.ஆரை பலருக்கும் பிடிக்கும்.
அப்படி தான் நடிகர் சத்யராஜூம் கூட, சத்யராஜ் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் உடைய தீவிர ரசிகராக இருந்தாராம். பிறகு சினிமாவிற்குள் நடிக்க வந்த பின் படங்களில் நடித்துவிட்டு எம்ஜிஆரை பார்க்க அவருடைய வீட்டிற்கே அடிக்கடி செல்வாராம். அந்த சமயம் சத்யராஜ் வளர்ந்து கொண்டிருந்த காலம் என்பதால் எம்ஜிஆரும் அவருக்கு அட்வைஸ் கொடுப்பாராம்.
பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்தபின் நான் சிறிய வயதில் இருந்தே உங்களுடைய தீவிர ரசிகன் என்று கூறிவிட்டு உங்களிடம் இருந்து நினைவாக எனக்கு எதாவது கொடுங்கள் நான் அதனை பத்திரமாக வைத்துக்கொள்கிறேன் என சத்யராஜ் கூறினாராம். பிறகு எம்.ஜி.ஆர் எதனை பரிசாக கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டு இருந்தாராம். அதன் பின் சத்யராஜ் ஒரு கர்லா கட்டையை பார்த்தாராம்.
கர்லா கட்டையை பார்த்தவுடன் சத்யராஜிற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக நான் இதை உங்களுடையாக நினைவாக எடுத்துகொள்ளவா என்று எம்ஜிஆரிடம் கேட்டாராம். பிறகு இவ்வளவு ஆசைப்பட்டு கேட்கிறார் என்பதால் எம்ஜிஆர் பரிசாக அந்த கர்லா கட்டையை கொடுத்தாராம். கர்லா கட்டை கிடைத்தவுடன் சத்யராஜ் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.
Rajinikanth : தீராத பகையின் உச்ச கட்டம்! ரஜினி -சத்யராஜ் சண்டைக்கு காரணம் என்ன தெரியுமா?
அவர் கொடுத்த அந்த கர்லா கட்டையை வைத்து தான் நடிகர் சத்யராஜ் இன்றுவரை உடற்பயிற்சிகளை செய்துகொண்டு வருகிறாம். எம்ஜிஆர் கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவருடைய நியாபகமாக இன்னும் அதனை வைத்து இருக்கிறாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…