பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா?

முதல் எலிமினேஷன் நாளான இன்று ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7’ நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு வாரம் முடிந்த பிறகு தான், பிக் பாஸ் வீட்டில் கலவரம் தொடங்கும், ஆனால் தற்போதைய எபிசோடில் முதல் நாளிலேயே சண்டை வெடித்தது.
முதல் நாளிலேயே வீட்டை இரண்டாக பிரித்து கொடுத்த பிக் பாஸ், ஸ்மால் பாஸ் விட்டிற்கு பாதி பேரை அனுப்பினார். ஸ்மால் பாஸ் விட்டில் இருப்பவர்களுக்கும், பிக் பாஸ் விட்டில் உள்ளவர்களுக்கும் சண்டை வராது என்று எதிர்ப்பித்தால், அங்கேயும் சண்டை வெடித்து.
இப்படி, பிக் பாஸ் வீட்டில் சிறியவர் பெரியவர் பாரபட்சம் இல்லாமல், வாக்குவாதம் காரசாரமாக சென்றுகொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் தொடங்கி 7வது நாளான இன்று இரவு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை கமல்ஹாசன் எலிமினேட் செய்வார்.
வாரம் தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர் சந்தித்து பேசுவார். அப்போது, யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று குறும்படம் போட்டு காமிப்பார். தப்பு செய்தவர்களுக்கு வார்னிங் ஒன்றையும் வழங்குவார்.
அந்த வகையில், இன்று வெளியான முதல் ப்ரோமவில், மஞ்சள் நிற ஸ்டிரைக் கார்டைக் காட்டி கேப்டன் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்து, இதுபோல் இன்னும் இரண்டு கார்டுகள் மேலும் பெற்றுக்கொண்டால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று கடுமையாகச் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
சக போட்டியாளர்களிடம் அநாகரியமாக நடந்து கொண்டதால் இந்த எச்சரிக்கை கமலிடம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில், ஜோவிகா, யுகேந்திரன் பிரதீப், ரவீனா தாஹா, பாவா செல்லதுரை, ஐஷு, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளனர். இதில் கம்மியாக வாக்குகள் பெற்ற அனன்யா ராவ் பிக் பாஸ்ஸில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பிக் பாஸ் தொடங்கி முதல் வாரம் தான் ஆகுகிறது என்பதால் இன்று எலிமினேஷன் இருக்காது என தெரிகிறது. ஆனால், என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025