இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர்.
இதையும் படியுங்களேன்- இத செய்யாம விட்டுட்டாரே… மணிரத்னம் மீது மன வருத்தத்தில் பிரபல தயாரிப்பளார்.!
இதனையடுத்து, முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், ஷாருக்கான் தனது ட்வீட்டர் பக்கத்தில் சுவாரஷியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பது “இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார்.
நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் மனம் விட்டு பேசியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார். அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…