ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வசந்த்ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். 3 வாரங்கள் ஆகியும் படம் நல்ல வரவேற்பை பெற்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையில், படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் ரவி ரஜினிக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” விலைமதிப்பற்ற நினைவுகளை பரிசளித்த ரஜினி அப்பாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளை நான் இந்த தருணத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பில் அவருடன் கழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் அழியாத நினைவாக நெஞ்சில் இருக்கும்.
ஜெயிலர் படப்பிடிப்பு ரஜினி சார் என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் என் நடிப்புத் திறனை மட்டுமன்றி, வாழ்க்கை பற்றிய புரிதலை கொடுத்துள்ளது. அந்த தருணங்களை நான் என்றுமே மறக்கவே மாட்டேன். இது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்” என மிகவும் உருக்கமாக நடிகர் வசந்த் ரவி பதிவிட்டுள்ளார்.
மேலும், வசந்த் ரவி ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் குறைவாக இருந்தாலும் கூட தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருப்பார். படத்தில் மற்ற கதாபாத்திரங்களை போலவே, அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…