ஹிப் ஹாப் ஆதி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரையும் கிரிக்கெட் பிரபலங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து நாம் பார்த்திருப்போம். குறிப்பாக கே.எல்.ராகுலை நடிகர் விக்ராந்துடனும், ரோஹித் சர்மாவை மிர்ச்சி சிவாவுடனும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து பார்த்திருப்போம். ஆனால், இப்போது அதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அது என்னவென்றால், நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். அப்போது ஆஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவர் வேகமாக வந்து ஹிப் ஹாப் ஆதியை கட்டியணைத்து கொண்டு கைகுலுக்கி புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார்.
பிறகு உலகக்கோப்பையை வென்று இருக்கிறீர்கள் உங்களுக்குஎன்னுடைய வாழ்த்துக்கள் என்று ஆதியை பார்த்து அந்த நபர் கூற ஆதி அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த நபரிடம் எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று ஆதி கேட்கிறார். அதற்கு அந்த நபர் நீங்கள் ரோஹித் சர்மா தானே? என்று கேட்கிறார்.
உடனே சிரித்த ஆதி நான் ரோஹித் சர்மா இல்லை நான் இந்தியாவை சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் என்று கூறி விளக்கம் கொடுத்தார். உடனே இதனை கேட்ட அந்த நபர் சிரித்துக்கொண்டே சென்றார். இந்த வீடியோவை ஹிப் ஹாப் ஆதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரோஹித் சர்மாவையும் டேக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…