இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படம் 50 கோடியை கடந்து பல வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது.
இதையும் படியுங்களேன்- மன்மத லீலை பட நடிகையின் தூக்கலான அட்டகாசமான புகைப்படங்கள்.!
இந்நிலையில், துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியர் தனது சமூக வலைதள பக்கங்களில் அஜித்துடன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” அஜித் சார் நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், புகைப்படத்தை பார்த்த பலரும் கண்மணி படத்தில் உங்களுடைய நடிப்பு சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…