நயன்தாராவிற்கு நோ! காஜலுக்கு எஸ்!!
ஜெயம் ரவி, இயக்குனர் மோகன் ராஜா இருவரின் திரைப்பயணத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தனி ஒருவன். இப்படம் தமிழ் சினிமாவின் ஓர் மைல் கல் என சொல்லும் வகையில் ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பெற்றது
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்திருந்தனர். தற்போது அதற்கான நடிகர் நடிகைகளுக்கான தேடல் நடைபெறுகிறது.
தனிஒருவன் முதல் பாகத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருப்பார். இரண்டிம் பாகத்தில் நடிக்க காஜல் அகர்வாலை படக்குழு கமிட் செய்துள்ளதாம். மேலும் இரண்டாம் நாயகியாக நடிக்க நடிகை சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் படக்குழு.
DINASUVADU