கம்பீரமாக களமிறங்கும் "தனி ஒருவன்2" : ஜெயம் ரவி-மோகன் ராஜா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ரீமேக் ராஜா என பெயரெடுத்திருந்த ஜெயம்ராஜா, தான் சிறந்த இயக்குனர் எனபெயரெடுக்க கடுமையாக உழைத்து எடுக்கபட்ட திரைப்படம்தான் தனிஒருவன். இப்படம் இயக்குனர் மோகன் ராஜா-வை தனித்து கவனிக்க வைத்திருந்தது. இது மோகன் ராஜாவிற்க்கு மட்டுமல்ல நடிகர் ஜெயம் ரவி-க்கும் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதில் மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோர்களை தாண்டி ரசிகர்கள் பேசிய கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யு . அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஷ்டைலிஷான வில்லனாக வாழ்ந்திருப்பார். இப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய மெகா ஹிட் படமாக அமைந்தது.
இப்படம் வெளியாகி இன்றோடு மூன்று வருடங்கள் ஆகியுள்ளது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து நன்றி கூறிய ஜெயம் ரவி ஒரு வீடியோவும் வெளியிடாடார். அதில் இயக்குனர் மோகன் ராஜா ஜெயம்ரவி இருவரும் தனி ஒருவன் 2 பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர் , மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியிடப்படும்.
DINASUVADU