வசூல் வேட்டையை தொடரும் ‘தங்கலான்’! ‘ஐ’-யை தொடர்ந்து விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட்!

Thangalaan Joins 100 Cr Club

சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்காலன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட்-15ல் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் 100-110 கோடி வரையில் பட்ஜெட்டில் உருவாகி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த படம் தற்போது 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் தயாரிப்பாளருக்கு இதுவரை பெரிதளவு லாபம் இதுவரை ஈட்டவில்லை என்றாலும் வரும் வாரத்தில் லாபம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமின் திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தால் அவர் தனது உடலை வருத்தி மிக சிறப்பாக நடித்திருக்கும் படங்கள் கவனம் பெற்றாலும், அவருக்கென ஒரு அங்கீகாரம் திரைத்துறையில் பெரிதளவு கிடைத்ததில்லை. இதற்கு சாமுராய், தெய்வதிருமகள், கந்தசாமி, இராவணன், ஐ போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

இவருக்கு கடைசியாக 2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘அந்நியன்’ திரைப்படம் தான் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெரிதளவு வரவேற்பை பெற்றது. மேலும், அந்நியன் திரைப்படம் தான் அவருக்கு கடைசியாக கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியும் ஆகும். அதன் பிறகு கிட்ட தட்ட 19 ஆண்டுகள் ஆகியும் ஒரு பிரமாண்ட வெற்றியை கூட அவர் பார்த்ததில்லை. இந்த படங்களை எல்லாம் தாண்டி தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தில் தனது உடலை மிகவும் வருத்தி நடித்திருப்பதாக விக்ரமே படத்தின் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

“உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்” என்று சொல்வார்கள் அதற்கு தகுந்தது போல படக்குழு பல கஷ்டங்களை எதிர்கொண்டு இந்த படத்தை உருவாக்கியதற்கு பலனாக தற்போது தங்கலான் திரைப்படம் ‘100கோடி’ வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது சியான் விக்ரமை பொறுத்த வரை ஒரு சின்ன “ஜாக்பாட்” என்றே கூறலாம். இன்னும் திரையரங்குளில் தங்கலான் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் மேற்கொண்டு வசூல் வேட்டையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்