thangalaan vs raayan [file image]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
பா.ரஞ்சித் ட்ரைக்ட் செய்து விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ப்ரீத்தி கரண், பசுபதி, பார்வதி திருவோத்து, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ஜானி ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 15-ஆம் தேதி) வெளியான இந்த திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இரண்டாம் பாதியில் கதை மற்றும் திரைக்கதை சற்று தொய்வாக இருப்பதாக பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தங்கலான் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இந்தியா முழுவதும் 13 கோடி எனவும், தமிழகத்தில் மட்டும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னுமே படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கலான் படத்துக்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 10.8 கோடி வரை வசூல் செய்திருந்தது. அந்த வசூலை விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ராயன் உலகம் முழுவதும் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட்டானது. அந்த வசூல் சாதனையை தங்கலான் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…