சியான் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ பட ஸ்பெஷல் வீடியோ.!

Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது.
அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் அந்த வீடியோவில் அவர் பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் மற்றும் முரட்டுத்தனமான அவதாரத்தை ருப்பதையும் காட்டுகிறது.
Thank you my team #Thangalaan for this fiery yet beautiful ‘tribute’. ????
Glimpses link ???? https://t.co/3KqDtpb4a1@Thangalaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam@jiostudios
— Vikram (@chiyaan) April 17, 2024
படத்தில் சியான் விக்ரம் தவிர, பார்வதி திருவோடு , மாளவிகா மோகனன் , டேனியல் கால்ட்ரோஜின், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்து, படத்தின் ரிலீஸ் தேதிக்கு காத்திருக்கிறது. இன்னும் இப்படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், விரைவில் இப்படம் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025