இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, டைகர் கார்டன் தங்கதுரை, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் டீசர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது என்றே கூறலாம்.
நீங்க ஹீரோவா நடிச்சா நாங்கெல்லாம் என்ன பண்றது? சூரி குறித்து விஸ்ணு விஷால்!
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டிகளில் பேசுவதற்கு படத்தில் நடித்த பல பிரபலங்களும் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் தங்கதுரை லால் சலாம் படம் குறித்து பேசி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” லால் சலாம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் பயங்கரமாக இருக்கும். நான் பார்த்தேன். என்னால் அதனை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.
தலைவர் ரஜினிகாந்த் செய்யும் சண்டைக்காட்சிகள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை காட்சியுடன் பார்க்கும்போது புல்லரிக்கும் வகையில் இருந்தது. கண்டிப்பாக அந்த காட்சி அனைவர்க்கும் பிடிக்கும்” எனவும் நடிகர் தங்கதுரை கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…