தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டிலும் சாதனை படைக்கும் தளபதி….!!!
விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம்வெளியிடுவதற்கு பல தடைகள் இருந்தாலும், அவற்றையும் தாண்டி சர்க்கார் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், 80 நாடுகளில் முதன்முதலாக வெளியாகும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை சர்க்கார் பெற்றுள்ளது. விஜய்யின் சர்க்கார் 1200 ஓவர்சீஸ் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். தளபதியின் படத்திற்கு தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டிலும் போட்டி எழுந்துள்ளதாம்.
source : tamil.cinebar.in