இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணுவிஷால், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால்சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா விக்ராந்த், விஸ்ணுவிஷால், தம்பி என அனைவரும் கலந்துகொண்டார்கள்.
இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பி ராமையா ராமர் கோயில் திறப்பு விழா பற்றியும், இந்து – இஸ்லாமியர் ஒற்றுமை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் கோயில் பிரதிஷ்டை நடந்தது. அப்போது இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ராம் ரகீம்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
எதற்காக அதனை சொல்கிறேன் என்றால் அந்த தாயின் குணம் தான் தற்போது உருவாகி இருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் கதை. படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா அவர்களுக்கு அடுத்ததாக பெண் இயக்குநர்கள் ஃபீல் குட் படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை உடைத்து ஒரு ஆண் இயக்குனருக்கு இணையாக ஐஸ்வர்யா நல்ல படத்தை எடுத்து இருக்கிறார்.
ரஜினி சார் சிவாஜி ராவாக வந்தவர் காந்தாக மாறி கருப்பு என்பதை திராவிட இனத்தின் நிறம் என்பதை நிரூபித்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு சமயத்திலே முதல்வர் நாற்காலி அவரை வந்தமர அழைத்தது. ஆனால் அதனை ரஜினிகாந்த் தனது ஞானத்தால் மறுத்தார். சினிமா உயிரோடு இருப்பதற்கு ரஜினிகாந்த் தேவை” என்றும் தம்பி ராமையா பாராட்டி பேசியுள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…