சொன்னதை செய்து காட்டிய தமன்! விஜய்யை தொடர்ந்து மாணவருக்கு செய்த உதவி!
சென்னை : மாணவருக்கு பைக் வாங்கிக்கொடுப்பேன் எனக் கூறிய இசையமைப்பாளர் தமன் சொன்னதை செய்துகாட்டி நிலையில், அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டு கோவையைச் சேர்ந்த மாணவன் பேசிய வீடியோ அனைவரையும் கலங்க வைத்தது என்றே சொல்லலாம். நிகழ்ச்சியில் பேசிய அந்த மாணவன் “என்னுடை குடும்பம் கஷ்டப்படுவதன் காரணமாக நான் படித்துக்கொண்டே மூடை தூக்கும் வேலைக்குச் சென்று வருகிறேன். குறைந்தது ஒரு நாளைக்கு நான் 5 மணி நேரம் வேலை செய்வேன். இரவில் சில நேரங்களில் பேருந்து இல்லையென்றால் வீட்டிற்குக் கிட்டத்தட்ட ஒரு 3 கி.மீ., நடந்தே செல்வேன். என்னுடைய அம்மாவு எலும்பு தேய்மானம் இருப்பதால் அவர் தூங்க ஒரு பெட் வாங்கி கொடுக்கவேண்டும்” எனவும் பேசினார்.
மாணவன் பேசிய அடுத்த நாளே, நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மாணவருடைய குடும்பத்தினருக்குக் கோவில்பட்டி நிர்வாகிகள் மூலமாக உதவி செய்திருந்தார். தனது தாய்க்கு பெட் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்ட அந்த மாணவருடைய வீட்டிற்கு பெட் மற்றும் கையில் ரூ.25,000 பணம் கொடுத்து விஜய் உதவி செய்திருந்தார். விஜய் செய்த செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்த நிலையில், இசையமைப்பாளர் தமனும் மாணவருடைய குடும்பத்திற்கு உதவியைச் செய்திருக்கிறார்.
மாணவன் பேசிய, அந்த வீடியோ வைரலாக பரவிய தொடங்கியவுடன் முதல் ஆளாகப் பார்த்து எமோஷனலாது இசையமைப்பாளர் தமன் தான். மாணவன் பேசிய வீடியோவை, பார்த்துவிட்டு அம்மா மேல இவ்வளவு பாசமா இந்த மாணவனுக்கு நாம் எதாவது உதவி செய்யவேண்டும் என்ற மனப்பான்மையோடு, தமன் அந்த மாணவனுக்கு பைக் வாங்கிக் கொடுப்பதாகவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார்.
அறிவித்ததைத் தொடர்ந்து, சொன்ன வாக்கைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு, தமன் பைக்கை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து மாணவர் மற்றும் அவருடைய அம்மாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். சொன்னதை போல மாணவருக்கு ஸ்கூட்டி ஒன்றையும் வாங்கி கொடுத்து வாக்கையும் தமன் காப்பாற்றினார். பைக்கை பார்த்ததும் அந்த மாணவனும், அவருடைய தாயாரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆனந்தக் கண்ணீருடன் தாயாரும், அந்த மாணவனும் சேர்ந்து இசையமைப்பாளர் தமனுக்கு தனது நன்றிகளை தெரிவிக்க தமன் நன்றி எல்லாம் இருக்கட்டும் பிள்ளையை நீங்கள் ரொம்பவே நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் என பாராட்டினார். பின் அம்மாவைக் கண்கலங்காமல் கடைசி வரை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மாணவருக்கு தமன் அறிவுரையும் கூறினார். தமன் உதவி செய்ததைப் பார்த்த ரசிகர்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்றிவிட்டீர்கள் எனப் பாராட்டி வருகிறார்கள்.