தளபதி 62-வில் அறிமுகப்பாடல் ரெடியாகிவிட்டதா ? இதோ விவரம் ….
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வர இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படத்தின் போட்டோ சூட் சமீபத்தில் நடைபெற்றது.
அந்த புகை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .தற்போது விஜயின் 62 படமான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது …
இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62 படத்தின் பூஜை தொடங்கியது.முதல்கட்டமாக சென்னையில் 30 நாட்கள் படபிடிப்பும் ,தொடர்ந்து கொல்கத்தாவிலும் படபிடிப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது …
இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கி வந்தார்கள். தற்போது அந்த பாடல் காட்சி முடிந்து விட்டதாகவும், அந்தப் பாடல், விஜய்யின் அறிமுகப் பாடல் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் 62 திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..தீபாவளிக்கு தளபதி62 என ட்விட்டரில் ஏ.ஆர்.முருகதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது …
#Thalapathy62 #Vijay62withSunPictures #Vijay62 #Vijay @actorvijay @ARMurugadoss @arrahman #KeerthySuresh @KeerthyOfficial
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …..