Thalapathy 68 [FILE IMAGE]
மும்பை விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சூர்யா கங்குவா திரைப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்துக்கொண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக வெளிநாட்டில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், அவர் வெளிநாட்டில் வீடு திரும்பினாரா அல்லது கங்குவா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பாங்காங் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
இந்த நிலையில், தளபதி 68 படத்திற்கான முக்கிய பணிக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் வெங்கட் பிரபு, அந்த வேலைகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் போல் தெரிகிறது. அப்பொழுது, மும்பை வந்துள்ள வெங்கட் பிரபு சூர்யாவை சந்தித்துள்ளார் போல் தெரிகிறது. அவருடன் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்துள்ளார் .
தற்பொழுது, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில், வெங்கட் பிரபு ‘சும்மா இருக்கும் சங்க ஊதி கெடுப்பது போல்’ இருக்கிறது. அட ஆமாங்க…. சும்மாவே தளபதி 68 திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி வருகிறார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…