Thalapathy68: சும்மா இருக்கும் சங்க ஊதி கெடுத்துடீங்க! ரோலக்ஸை சந்தித்த வெங்கட் பிரபு!

Thalapathy 68

மும்பை விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Suriya's Lates
Suriya’s Lates [FILE IMAGE]

சூர்யா கங்குவா திரைப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்துக்கொண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றதாக கூறப்படுகிறது.  கடந்த சில தினங்களாக வெளிநாட்டில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், அவர் வெளிநாட்டில் வீடு திரும்பினாரா அல்லது கங்குவா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பாங்காங் சொல்கிறாரா என்று  தெரியவில்லை.

SURIYA Coolest Look
SURIYA Coolest Look [FILE IMAGE]

இந்த நிலையில், தளபதி 68 படத்திற்கான முக்கிய பணிக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் வெங்கட் பிரபு, அந்த வேலைகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் போல் தெரிகிறது. அப்பொழுது, மும்பை வந்துள்ள வெங்கட் பிரபு சூர்யாவை சந்தித்துள்ளார் போல் தெரிகிறது. அவருடன் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்துள்ளார் .

Suriya - VenkatPrabhu
Suriya – VenkatPrabhu [Image -@vp_offl]

தற்பொழுது, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில், வெங்கட் பிரபு ‘சும்மா இருக்கும் சங்க ஊதி கெடுப்பது போல்’ இருக்கிறது. அட ஆமாங்க…. சும்மாவே தளபதி 68 திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்