லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் கொடுத்த ரியாக்சன்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கையில் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், விஜய் நடிகர் லியோ திரைப்படத்தை பார்த்து மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம். படத்தை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் லோகேஷ் கனகராஜை கட்டிமட்டும் அனைத்தாராம். எனவே, அவர் கட்டி அனைத்ததிலேயே படம் எப்படி வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. விஜய்யே படத்தை பார்த்து சந்தோசமாக இருக்கிறார் கண்டிப்பாக படம் பிளாக் பஸ்டர் தான் என கூறி வருகிறார்கள்.
ரிலீஸ் தேதியில் மாற்றம்? ஒரே நாள் முன்பே வெளியாகும் ‘லியோ’ திரைப்படம்!
ஏற்கனவே , லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் போது அந்த டிரைலரை 3 முறை விஜய் பார்த்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து படத்தையும் விஜய் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளதால் படத்தின் மீது இன்னுமே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. எனவே, படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும், லியோ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் விஜய் டிரைலரில் கெட்டவார்த்தை பேசியதற்கு பெரிய விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்து பேசினார்.
அதில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது ” அந்த காட்சியில் வரும் கெட்டவார்த்தையை நான் தான் அவரை பேச சொன்னேன். அவர் விஜயாக பேசவில்லை அந்த கதாபாத்திரமாக பேசியுள்ளார். படத்தில் அந்த வார்த்தையை பேசும்போது என்னிடம் கேட்டார் இந்த வார்த்தை கண்டிப்பாக பேசணுமா? என்று கேட்டார். நான் தான் கண்டிப்பாக பேசுங்கள் சரியாக இருக்கும் என்று கூறினேன். எனவே இதற்கு நான் மட்டும் தான் பொறுப்பு” என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025