Thalaivar171 Story About Vijay: ‘தலைவர் 171’ கதையை கேட்டு தளபதி விஜய் கொடுத்த அந்த ரியாக்ஷன்! இயக்குனர் ஓபன் டாக்!!

lokesh vijay

‘தலைவர் 171’ கதையை கேட்டு தளபதி விஜய் சொன்னதை லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர்171’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இப்பொது, லியோ படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில், லோகேஷ் ப்ரோமஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தனியார் ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், நான் விஜய் அண்ணாவிடம் ‘தலைவர் 171’ படத்தின் கதையை சொன்னபோது, அவர் 10 நிமிஷம் கதை கேட்டுட்டு பாராட்டினார். 10 நிமிஷத்தில் இந்த மாதிரி கதை கேட்டு புடிச்சதே இல்லை, இந்த கதை “பயங்கரமா இருக்குடா” என்று விஜய் கூறினாராம்.

இதனால் தலைவர் 171 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜிற்கு ரஜினிகாந்த் கால் செய்து “லியோ படம் வெளியாகிறது படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் லோகேஷ்” என கூறியதாகவும் தெரிவித்துக்கொண்டார்.

இதற்கிடையில், லியோ திரைப்படத்தை முடித்து கொண்டு, விஜய் தனது தளபதி 68 படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அதுபோல், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் தலைவர் 171 படத்தின் கதையை எழுத தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. ரஜினி தற்போது நடித்து வரும் தலைவர் 170 படத்தை முடித்த பின்பு, தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap