LEO Review : பரபர ஆக்சன்… பக்கா மாஸ்.! தளபதி விஜயின் லியோ எப்படி இருக்கு.?

Thalapathy Vijay's Leo Movie Review

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்., பல்வேறு சர்ச்சைகள், குளறுபடி, பஞ்சாயத்து என வெளியாகி உள்ளது தளபதி விஜயின் லியோ திரைப்படம். விஜய், தனது பாணியை சற்று மாற்றிக்கொண்டு, அவரது  புதிய பரிமாண நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் , முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைல் இயக்கத்திலான ஒரு விஜய் படம், ராக்ஸ்டார் அனிருத்தின் அட்டகாசமான இசை என எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ளது லியோ திரைப்படம்.

தமிழகத்தை தவிர மற்ற கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் காலை  4 மணிக்கே லியோ முதல் காட்சி தொடங்கி திரையிடப்பட்டதை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்து வருகின்றனர் தமிழக விஜய் ரசிகர்கள். இப்படத்தை பார்த்துவிட்டு வெளியூர் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் என்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! தமிழகத்தில் வெளியானது தளபதி விஜயின் ‘லியோ’..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவும் , ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவும் படம் முழுக்க முழுக்க  ஆக்சன் நிறைந்து இருக்கிறதாம். படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் விஜய் மிரட்டி இருக்கிறாராம். பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இரு கதாபாத்திரங்களுக்கும் தனது அசத்தலான அனுபவம் வாய்ந்த நடிப்பை விஜய் வெளிப்படுத்தி உள்ளாராம்.

இப்படத்தில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது ஆக்சன் காட்சிகள் மற்றும் ஹயானா (கழுதை புலி) சண்டை காட்சி. ஆக்சன் காட்சி வழக்கம் போல அன்பறிவு மாஸ்டர்கள் மிரட்டியுள்ளனர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல, ஹயானா காட்சி பிசிறு தட்டாமல் கிராபிக்ஸ் பணிகளை படக்குழு கண்களுக்கு விருந்தாக்கியுள்ளதாம்.

ஒவ்வொரு கமர்ஷியல் படத்திலும் படத்தின் வெற்றியாக பார்க்கப்படுவது விறுவிறுப்பான திரைக்கதை. படம் பார்க்கும் ரசிகர்களை கொஞ்சம் தொய்வடைய வைத்தாலும் படத்தின் ரிசல்ட் மொத்தமாக சொதப்பிவிடும். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கில்லி என்றே சொல்ல வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலும் மெய்சிலிர்க்க வைத்து விட்டாராம்.

படம் LCUவில் இருக்குமா.? இருக்காதா என என்ற கேள்விக்கான விடை தெரிந்துவிட்டது. ஆம், படம் LCU வில் வருகிறது. ஆனால் படத்தில் டில்லி – கார்த்தி குரல் மட்டும் கொடுத்து இருக்கிறாராம். பிறகு கைதி படத்தில் வரும் காவல்துறை கான்ஸ்டபிள் நெப்போலியன் இந்த படத்திலும் இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத விஜயின் இன்ட்ரோ காட்சி, ஆர்ப்பரிக்கும் இடைவேளை, லோகேஷின் வெறித்தனமான ஆக்சன் திரைக்கதையில் கடைசி 30 நிமிடங்கள் என ஒரு பிளாக்-ஓ பிளாக் பஸ்டர் வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் படம் பார்த்த விஜய் ரசிகர்கள்.

இவ்வளவு கூறிவிட்டு அனிருத் இசையை பற்றி கூறாமல் விட்டுவிட்டால் சாமி குத்தமாகிவிடும். தற்போது வரும் பெரிய ஹீரோ படங்கள் சூப்பர் ஹிட்டுக்கு பதில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை தான். இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஜெயிலர் வெற்றி விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார். லியோவிலும் ராக்ஸ்டார் எந்த குறையும் வைக்கவில்லை. பாடல்களை போல பின்னணி இசையிலும் சும்மா தெறிக்கவிட்டு இருக்கார் என்றே படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் தளபதி விஜயின் லியோ – WINNER.!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்