வீட்டில் விசேஷம்…தாயார் ஷோபாவுடன் தளபதி விஜய்.!

Default Image

நடிகர் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது புதிய கேங்ஸ்டர் படமான ‘லியோ’ படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘வாரிசு’ திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

varisu
varisu [Image Source : Twitter]

இப்பொது, நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. சமீபத்தில், வெளியான வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது, அவரது தந்து பெற்றோர்களை கண்டுகொள்ளவில்லை என கருத்துக்கள் எழுந்தது.

vijay
vijay and Shobha [Image Source : Twitter]

ஆனால், இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், விஜய்யின் தாயார்  ஷோபா சந்திரசேகர் ஒரு யூட்யூப் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இந்த தருணத்தில் அவரது ரசிகர்களை அவர் மகிழ்விப்பது தான் முக்கியம். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

vijay and Shobha
vijay and Shobha [Image Source : Twitter]

இந்நிலையில், விஜய் தனது பெற்றோர் ஷோபா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் 50-வது திருமண நாளை கொண்டாடியபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என  கூறப்படுகிறது.

vijay and Shobha
vijay and Shobha [Image Source : Twitter]

விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்கின்றனர். இருந்தாலும் தனது அம்மா மீது அளவில்லா அன்பை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்