Thalapathy Vijay : விஜய் கூட படம் பண்ணுவீங்களா? அட்லீ சொன்ன பதில்!
ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் பெரிய ஹிட் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் அட்லீயின் மார்க்கெட் பாலிவுட்டிலும் உயர்ந்துள்ளது. ஜவான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லீ எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவர் பாலிவுட்டில் தான் மீண்டும் படம் இயக்க போகிறார் எனவும், மற்றோரு பக்கம் தமிழில் ஒரு படம் செய்துவிட்டு தான் பாலிவுட் பக்கம் செல்வார் எனவும் பலர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த அட்லீ மீண்டும் விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் விஜய் கூட படம் பண்ணுவீங்களா? என்ற கேள்விக்கு அசத்தலான பதிலை அட்லீ கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
ஜவான் வெற்றியை தொடர்ந்து சென்னைக்கு திரும்பிய அட்லீ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் கூட படம் பண்ணுவீங்களா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அட்லீ ” கொஞ்சம் காத்திருங்கள் நல்ல அறிவிப்பு வரும்” என கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக அப்போ விஜய்யை வைத்து அட்லீ ஒரு திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், அட்லீ பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.