Categories: சினிமா

Leo box office: இது தான் நெத்தி அடி!! தென்னிந்திய சினிமாவை அலறவிட்ட தளபதி விஜய்…

Published by
கெளதம்

நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான ‘லியோ’ திரைப்படம் உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தாண்டு வெளியான திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது ‘லியோ’ முறியடித்துள்ளது. விஜய் திரை வாழ்க்கையில் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவில் 3-வது படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் நடித்த “லியோ” திரைப்படம் நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

தொடக்க நாளில் இருந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று, லியோ படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக, கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே படம் வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து எந்தெந்த படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். லியோ திரைப்படம் தற்போது பல சாதனைகளை முறியடித்து வருகிறது.

தமிழகம் – கேரளா வசூல்

அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்ததுள்ளது. அந்த வகையில், கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடு வசூல்

உள்நாட்டில் கிடைத்த வசூலை போல், வெளிநாட்டு சந்தையில் இருந்தும் பெரிய தொகை கிடைத்திருக்கிறது. அதன்படி, லியோ அமெரிக்காவில் ரூ.18 கோடி ($2.2 மில்லியன்) வசூலித்துள்ளது. இந்நிலையில், வெளியான முதல் நாளில் படத்தின் மொத்த வெளிநாட்டு வசூல் சுமார் ரூ.60 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தெலுங்கு வசூல்

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தெலுங்கில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ஒரே நாளில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் வெளியீட்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தயாரிப்பாளருக்கு வசூல் மழை

வெறும் ரூ. 350-400 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் நாளில் ரூ.150 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில், படம் எடுக்கப்பட்ட மொத்த பணத்தில் பாதியை முதல் நாளில் எடுத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இன்னும் வரும் நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், வசூலில் லியோ சக்கை போடு போடும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில், இந்த திரைப்படம் ரூ.500 கோடியை விரைவில் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

2 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

3 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

6 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

7 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

8 hours ago