இது வேண்டும்.. அது வேண்டாம்… நிவாகிகளுக்கு கடிவாளம் போட்ட தளபதி விஜய்.? முக்கிய உத்தரவுகள்….
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்துள்ளார். கடைசியாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.
அதனை தொடர்ந்து இன்று அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசிய முக்கியமான விஷயங்களை பற்றி பேசி அறிவுரை கூறியுள்ளார். அதனை பற்றி தற்போது பார்க்கலாம்.
- விஜய் மக்கள் இயக்கத்தில் அதிக அளவி இளைஞர்களை சேர்க்க வேண்டும்
- ரத்த தான முகாம்களை கண்டிப்பாக அதிக அளவில் நடத்த வேண்டும். அதன் மூலம் இயக்கத்தை மக்கள் மத்தியில் நன்றாக கொண்டு செல்ல முடியும்.
- பேனர் வைக்கும்போது அதில் இடம்பெறுகின்ற வசனங்களை பார்த்து கவனமாக பயன்படுத்த வேண்டும்.
- பேனர் வைப்பது மட்டும் போதும், அதில் பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம்.
- ஏழை எளிய மக்கள் மற்றும் தேவையுள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிந்த அளவிற்கு தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள்.
- விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடின்றி எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.