தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த தளபதி விஜய்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தனது 66- வது படத்தில் நடித்து வருகிறார். இவரத்து நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தனது 66- வது படத்தில் நடித்து வருகிறார். இவரத்து நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

unknown node

விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் நல்ல வசூல் செய்து சில சாதனைகள் படைத்தது வருகிறது, உலகம் முழுவதும் படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

unknown node

இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவில் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடிப்பில் வெளியான  மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், ஆகிய படங்களை தொடர்ந்து  5 வது முறையாக பீஸ்ட்  தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது.

இதுவரை எந்த நடிகரின் படமும் தமிழகத்தில் தொடர்ந்து 5 முறை 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததில்லை. விஜய் படம் தொடர்ந்து 100 கோடி வசூல் செய்துள்ளதால், தமிழ் சினிமாவில் விஜய் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.