6YearsofMersal: 3 வேடத்தில் கலக்கிய தளபதி விஜய்! மெர்சல் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம்…

6 Years Of Mersal

நடிகர் விஜய் கேரியரில் முதல்முறையாக விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து, மீண்டும் அவருடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கினார், தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்தார்.

இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யராஜ், ஹரீஷ் பெராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரித்த இந்த திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு (அக்டோபர் 18 அன்று) இதே நாளில் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட மெர்சல் திரைப்படம் மிக்பெரிய வெற்றி பெற்றது. விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், வில்லன் (எஸ்.ஜே. சூர்யா) அப்பாவை (விஜய்) கொண்றதுடன் இரட்டையர்களாக மகன்களையும் கொலை செய்ய முயற்சி செய்வதை சுற்றி கதை நகரும்.

விஜய் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, அட்லீயின் இயக்கம் என அனைத்தும் பாராட்டை பெற்றதன் மூலம் பாசிடிவ் விமர்சனங்களை வசூலை வாரி குவித்தது. அதன்படி, ரூ.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலை குவித்து மாபெரும் சாதனை படைத்தது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற தரமான வெற்றி படங்களை கொடுத்த அட்லீ சமீபத்தில் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் பிரம்மண்ட வெற்றி திரைப்படத்தை வழங்கி ரூ.1000 கோடி வசூல் செய்த தமிழ் சினிமா இயக்குனர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

HBD Atlee: கோடி அறிவி கொட்டுதே…குருவை மிஞ்சிய சிஷ்யன்! நிற்காமல் செல்லும் அட்லீயின் பரிமாணம்!

ராஜா ராணி பட வெற்றியின் மூலம் அடுத்த வாய்ப்பாக விஜய்யை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அப்படி முதல் முறையாக இணைந்த அட்லீ -விஜய் கூட்டணியில் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவான தெறி படம் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் அட்லீயுடன் கைகோர்த்து ‘மெர்சல்’ என்ற படத்தில் நடித்தார் விஜய். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது.

Thalapathy Vijay : விஜய் கூட படம் பண்ணுவீங்களா? அட்லீ சொன்ன பதில்!

தொடர் வெற்றி காரணமாக, மீண்டும் மூன்றாவது முறையாக அட்லீயுடன் நடிக்க ஒப்புக்கொண்டு, சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று ரூ.300 கோடி ரூபாய் வசூலித்தது.

மெர்சல் பாக்ஸ் ஆபிஸ்

தமிழ்நாட்டில் மட்டும் மெர்சல் திரைப்படம் ரூ.126 கோடி வசூல் செய்தது. மேலும், கேரளாவில் ரூ.19.20 கோடி கர்நாடகாவில் ரூ.15.75 கோடி, ஆந்திராவில் ரூ.11.10 கோடி மற்ற பகுதிகளில் ரூ.3.30 கோடி என வெளிநாடுகளில் ரூ.77.20 கோடி சேர்த்து உலகளவில் மொத்தமாக ரூ.253.45 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்