தளபதி விஜய்யின் அடுத்த நகர்வு…தமிழகம் முழுவதும் நூலகம்…

Thalapathy Vijay Library

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தொடங்கப்படுகிறது.

நடிகர் விஜய் சமீபகாலமாக தனது மக்கள் இயக்கம் சார்பாக சில நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிகிறது.

அந்த வகையில், அவரது ரசிகர்கள், அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பது முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டியதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட அரசியல் குறித்த கேள்விக்கு ‘2026 கப்பு முக்கியம் பிகிலு’ என சூசகமாக பதில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது அடுத்த நகர்வாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் “தளபதி விஜய் நூலகம்” திட்டம் தொடங்கப்படுகிறது. நாளை முதற்கட்டமாக தாம்பரம், பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்கிறார். இரண்டாம் கட்டமாக  நவம்பர் 23ம் தேதி மேலும் 21 இடங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில், “தளபதி விஜய் நூலகம்” என்ற பெயரில் முதற்கட்டமாக, நாளை (18.11.2023) காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, அகில இந்திய பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்து துவக்கி வைக்கிறார்.

அரசியலை விளையாட்டா எடுத்துக்கக் கூடாது! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு பகுதி, சென்னை கிழக்கு வடசென்னை கிழக்கு பகுதி, வடசென்னை வடக்கு பகுதி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்