தளபதி விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்…!!!
திருக்குறள் மனுதர்மத்தை சாரமா ? என்ற தலைப்பில் வேம்பேரியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசியுள்ளார்.
இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், விஜய்யின் சர்கார் படத்தை கண்டு பலரும் பயப்படுவதாக கூறியுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த பிறகு யாருக்கும் காட்சிகளை நீக்க சொல்வதற்கு உரிமையில்லை என்றும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தனிப்பட்ட நபரையோ, கட்சியையோ பற்றி கூறவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், தன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் நன்மை செய்வார் என்றும் பழ.கருப்பையா கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in