தளபதி விஜய் சிகிச்சைக்காக கேரளா சொல்கிறாரா.?!
கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக தளபதி விஜய் செல்ல உள்ளாராம். அதன் பிறகு அவரது 66வது திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தனக்கான ஷூட்டிங்கை முழுவதும் முடித்துவிட்டார். இதற்கு பிறகு பீஸ்ட் படத்தில் மீதம் ஏதேனும் சிறு காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தால், அதனை மீதம் உள்ள நாட்களில் எடுத்து முடித்துவிட்டு, பீஸ்ட் ஷூட்டிங் முழுவதும் இம்மாதத்திற்குள் முடிந்துவிடும்.
இதனை அடுத்து, விஜய் தனது 66வது பட ஷூட்டிங்கில் விரைவில் கலந்துகொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. விஜய் எப்போதும் தனது பட ஷூட்டிங் முடிந்ததும் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டன் சென்றுவிடுவார்.
ஆனால், இந்த தடவை கேரளா செல்ல உள்ளாராம் விஜய். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைகள் பிரபலம். அங்கு தான் நயன்தாரா, விக்ரம் என பல திரை பிரபலங்கள் அவ்வப்போது செல்வர். அதே போல, இந்த முறை விஜயும் அங்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக செல்கிறாராம். அந்த சிகிச்சை முடிந்த பிறகு வெளிநாடு செல்வார் என கூறப்படுகிறது.
அதன் பிறகு, மார்ச் மாதம் முதல் தான் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தனது 66வது திரைப்படத்தில் கலந்துகொள்ள உள்ளாராம்.