நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.
மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை நடத்திய விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை!
அதுபோல், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவிக்க உள்ளாரா? இல்லையென்றால், அரசியல் குறித்து அதிகாரபூர்வ நுழைவை அறிவித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…