நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவா?

Vijay Makkal Iyakkham

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.

மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை நடத்திய விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை!

அதுபோல், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவிக்க உள்ளாரா? இல்லையென்றால், அரசியல் குறித்து அதிகாரபூர்வ நுழைவை அறிவித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan