இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் , பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தவர் தான் விஜய். இவரது தந்தை அந்த காலகட்டத்தில் பிரபலமான இயக்குனர் என்பதால் நான் சிவப்பு மனிதன், வெற்றி, சட்டம் ஒரு விளையாட்டு போன்ற சில திரைப்படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
அதன்பிறகு, ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் அவரை ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இந்த படம் பெரிதாக வெற்றிபெறாத காரணத்தால், இப்போது உள்ள அளவிற்கு விஜய் வளர்ந்து பெரிய நடிகராக இருப்பார் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
முதல் படம் தோல்வியடைந்தால் என்ன தன்னுடைய கடின உழைப்பை கைவிடாமல் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான “பூவே உனக்காக” படம் விஜய்யை பெரிய அளவில் நடிகராக தெரியவைத்தது என்றே கூறவேண்டும்.
இந்த படத்திற்கு பிறகு காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி என அணைத்து படங்களுக்கு விஜய்க்கு வெற்றியை தேடி தந்தது.அதன்பிறகு இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மார்க்கெட்டை உயர்ந்திய படம் என்றால் துப்பாக்கி என்று கூறலாம். துப்பாக்கி படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் வரை எந்த படங்களுக்கு தோல்வியை அடையவில்லை வசூல் ரீதியாக பல சாதனைகளயும் படைத்தது.
இப்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…