நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்று லலித்திற்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ளது.
இதிலும் லலித் குமார் கடைசியாக விஜய்யை வைத்து தயாரித்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து லலித்குமாருக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். எனவே, இந்த பிரமாண்ட வெற்றியோடு லலித்குமார் தன்னுடைய மகன் திருமணத்தையும், பிரமாண்டமாக நடத்தியுள்ளார்.
அதன்படி, லலித் குமாரின் மகன் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. அந்த விழாவில் லலித் குமாரின் உறவினர்கள் கலந்துகொண்டார்கள். விஜய்க்கும் லலித் குமார் நெருங்கிய சொந்தம் தான். எனவே, விஜய்க்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த விஷயத்தில் சாய் பல்லவியை தான் பாலோவ் பண்ணனும்! அட்வைஸ் கொடுத்த இளம் நடிகை!
எனவே, விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த புதுமண தம்பதிகளை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குன வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படமான தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…