திடீர் சந்திப்பு.! தளபதி விஜய் – யுவன்.! ஒருவேளை அப்படி நடக்க வாய்பிருக்கோமோ.?!

தளபதி விஜயும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வேளை பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங் முடித்து அதற்கான டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர் விடுமுறைக்காக லண்டன் செல்ல உள்ளார். அதற்கடுத்து தெலுங்கு, தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இணையதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டார். அவர் பதிவிட்டது முதல், தற்போது வரையில் இணையத்தில் வைரல் தீயாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் யுவன் உடன் இருந்தார். புதிய கீதை படத்திற்கு பிறகு இருவரும் இணைந்தது இல்லை. தளபதி படத்திற்க்கு அதற்கு பிறகு யுவன் இசையமைத்தது இல்லை. தற்போது இருவரும் இருக்கும் போட்டோ பார்த்ததும் பலரும் பல கதைகளை கூற ஆரம்பித்து விட்டனர்.
தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளார். அதனால் தான் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என வதந்திகளை பரப்பி வருகின்றனர். உறுதியான தகவல்கள் வரும் வரை இது வெறும் வதந்தியாகவே கடந்துவிடுவது நல்லது.
???? pic.twitter.com/t7hhiPp7Ph
— Raja yuvan (@thisisysr) December 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025