“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

உங்க Favorite Celebrity Crush யார்? என்ற கேள்விக்கு தளபதி விஜய் தான் என ட்ராகன் பட நடிகை கயாடு லோஹர் பதில் அளித்துள்ளார்.

vijay - KayaduLohar

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ ட்ரெண்ட் ஆகிராறோ இல்லையோ தற்போதைய தலைமுறைகளிடம் கதாநாயகி கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகி விடுகிறார்.

அந்த வகையில், டிராகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் தற்போது பல இளைஞர்களின் புதிய கனவுக் கன்னியாக அவர் மாறியுள்ளார். அட ஆமாங்க… நடிகை கயாடு லோஹர் தான் இன்றைய இளசுகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

சமூக வலைத்தளங்களில், எங்கு பார்த்தாலும் அவரது ஃபோட்டோக்களும், வீடியோக்களுமே டிரெண்டிங்கில் உள்ளன.  இந்நிலையில், சேலத்தில் இன்று நடைபெற்ற தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் கயாடு லோஹர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அந்த விழாவில் ‘கில்லி’ படத்தின் ‘அப்படி போடு’ பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தால் சேலமே குலுங்கிப் போனது. அத்துடன் அந்த விழாவில் மேடையில் உங்களது celebrity crush யார்? என்று கேட்ட போது, தளபதி விஜய்தான் என வெட்கத்துடன் கூறினார். மேலும், 2016 ஆம் ஆண்டு வெளியான விஜய் படமான தெறி தான் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், அதில் தளபதியை ஒரு பவர்புல் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என கூறினார்.

தற்போது, டிராகனின் வெற்றியில் மூழ்கி இருக்கும் நடிகை கயாடு லோஹர் அடுத்த, நடிகர் அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ என்ற தமிழ் காதல் படத்தில் அவர் நடிக்க உள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் இந்தப் படத்தில், பிரீத்தி முகுந்தன், நிஹாரிகா என்.எம், மற்றும் பிரக்யா நக்ரா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். அத்துடன், இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கும் ஃபங்கி என்ற தெலுங்கு குடும்ப சார்ந்த பொழுதுபோக்கு படத்திலும் அவர் நடிக்கிறார், அதில் அவர் விஷ்வக் சென்னுடன் நடிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்