நடிகர் விஜயும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் மக்கள் இயக்கத்திற்கு என்று பிரத்யேக கொடியையும் விஜய் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை, மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைக்க இணையதளம் ஒன்றை விஜய் துவக்கியுள்ளார். www.vijaymakkaliyyakam.in என்ற பெயரிலான இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்களை விஜயின் மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளலாம். மேலும் விமி (vmi) என்ற செல்போன் ஆப்பையும் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த ஆப்பை டவுன்லோட் செய்தும் தங்கள் விவரங்களை கொடுத்து விஜயின் மக்கள் இயக்கத்தில் இணையலாம். அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினி மற்றும் கமல் ஆன்லைன் மூலம் தங்கள் ரசிகர்களை ஒன்றிணைத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…