7 கோடியாம்.! தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் லைட்டிங் செலவு மட்டுமே இவ்வளவா?! அதிர்ச்சியில் திரையுலகம்.!
பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் காட்சிகள் அதிகமாக இருப்பதால், லைட்டிங்கிற்கு மட்டுமே கிட்டத்தட்ட 7 கோடி செலவு ஆகியுள்ளதாம்.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதற்கு பிறகு 2வது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் பிரமாண்ட மால் செட்டில் முக்கால்வாசி படம் நடைபெறுவது போல உள்ளது. ஆதலால், அதிகமாக லைட்டிங் வசதி தேவைப்படுகிறதாம். இதுவரை 6 கோடி லைட்டிங் செலவு ஆகியுள்ளதாம். அடுத்து இன்னும் மீத படப்பிடிப்பிற்கு 1 கோடி தேவைப்படுமாம்.
இதன் மூலம் பீஸ்ட் பட லைட்டிங் செலவு மட்டுமே 7 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மெர்சல் படத்திற்கு தான் அதிகபட்சமாக லைட்டிங் செலவு மட்டுமே 4 கோடி என கணக்கு காட்டப்பட்டதாம். அதனை தற்போது பீஸ்ட் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.