நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது . படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது.
இந்த படத்தின் முக்கிய வேலைக்காக விஜய் சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அங்கு அதிநவீன முறையில் அவரது முகம் 3D ஸ்கேன் செய்யப்படும் புகைப்படத்தையும் கூட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் திரையரங்கில் ‘தி ஈகுவலைசர் 3’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
படத்தை பார்த்தவுடன் நடிகர் விஜய் தன்னுடைய படங்களை திரையரங்கில் ரசிகர்கள் எந்த அளவிற்கு பார்த்து கொண்டாடி கைகளை தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பார்களோ அதே போல விஜய்யும் நிஜ ஃபேன் பாயாக மாறி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.
தற்பொழுது, ‘தளபதி 68’ படத்தின் முதல் பாடல் “ஒரு தர லோக்கல் குத்து பாடலாக தான் இருக்கும்” என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இப்பொது, இந்த தகவல் விஜய் ரசிகர்களை பெரிதும் குஷி படுத்தியுள்ளது. சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற தரமான படங்களை இயக்கியுள்ள வெங்கட் பிரபு – விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைந்துள்ளதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…