செம ஆரம்பமே அமர்க்களம்!! அட்டகாசமான BGM-உடன் ‘தளபதி 68’ பூஜை வீடியோ வெளியீடு!
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவருடைய 68-வது படத்திற்கான படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆம்… லியோ படம் அக்-19-ஆம் தேதி வெளியான நிலையில், அக் 2-ஆம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சைலண்டாக நடைபெற்றது.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிமண்ட் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படம் வெளியான காரணத்தால் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் தாமதமாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, முதல் அப்டேட்டாக நடந்து முடிந்த பூஜைக்கான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பூஜை வீடியோவுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மெனக்கெட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. தனது பாணியில் பின்னணி இசை அமைத்து அசத்தியுள்ளார். இந்த பூஜை விழாவில் விஜய், வெங்கட் பிரபு, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், பிரபுதேவா, மோகன், லைலா, யுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மங்களகரமாக படத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்ததாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கிறதாம். அங்கு வைத்து தான் நடிகர் விஜய் மற்றும் மோகனுக்கு இடையே நடைபெறும் சண்டைக்காட்சி எடுக்கப்படவுள்ளதாம். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருவது படக்குழு வெளியிட்ட பூஜை வீடியோவில் உறுதியாகியுள்ளது.