தளபதி 68 திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

thalapathy 68 vijay

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜய் ராஜ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ், விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், ஜெயராம், மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்  நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பு முடிந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதற்கிடையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தளபதி 68 திரைப்படத்தை படக்குழு அடுத்த ஆண்டு 2024 அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீபாவளிக்கு அடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.

கூட இருந்தே என்ன ஏமாத்திட்டு போயிட்டாங்க! கதறி அழுத பாலாஜி முருகதாஸ்!

படத்திற்கான படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் போது அதனுடன் சேர்த்து அறிவித்து சர்ப்ரைஸ் கொடுக்கவும் திட்டமிடபட்டு இருக்கிறதாம்.

ஏற்கனவே, தளபதி 68 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தலைப்புடன் அறிவிக்கப்படவுள்ளதாகவும், படத்தின் தலைப்பு முதல் எழுத்து M என்ற எழுத்துடன் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்