thalapathy 68 ivana [File Image]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், அஜ்மல் அமீர், பிரசாந்த், யோகி பாபு, பிரபுதேவா, விடிவி கணேஷ், பிரேம்ஜி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ், வைபவ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள்.
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயிமென்ட் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியாகி இருந்தது. அதில் தான் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
படத்தில் நடிக்கும் பிரபலங்களை பார்க்கும் போதே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானது என்றே கூறலாம். இந்நிலையில், ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இத்தனை பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பிரபலம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓவர் ஹைப் ஏத்தாதீங்க! வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் விஜய்?
அவர் வேறு யாரும் இல்லை லவ் டுடே படத்தில் நடிகையாக நடித்ததன் மூலம் பிரபலமான இவானா தான். தளபதி 68 படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே பரவி வந்த நிலையில், அந்த மகனாக நடிக்கும் விஜய்க்கு குட்டி தங்கை கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம். அந்த கதாபாத்திரம் தான் படத்தில் மிகவும் முக்கிய துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறதாம்.
அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை நடித்தால் சரியாக இருக்கும் என்ற காரணத்தால் லவ் டுடே, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்த இவானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல யூடியூப் சினிமா சேனலான வலைப்பேச்சு சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…