விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , அந்த படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். அந்த படத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்களோ அதே போலவே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68 திரைப்படத்திற்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்னும் லியோ திரைப்படம் வெளியாகவில்லை, அதேபோல தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பும் கூட தொடங்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தளபதி 68 படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். ஏனென்றால் வெங்கட் பிரபு விஜய் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூன்று பேரும் இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தினால் பெரிய அளவில் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றி தேர்வு தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடிக்கடி தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பற்றி அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் வேறு யாரும் இல்லை வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் அரவிந்த் சாமி தான் நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தில் நடிக்க அரவிந்த் சாமி நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் ஏற்கனவே, வெங்கட் பிரபு இயக்கத்தில் அரவிந்த் சாமி கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…