தளபதி 67 :
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்தில் நடிகர் விஜய்யுடன் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இன்னும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட, இந்த தகவல்கள் எல்லாம் கிட்டத்தட்ட உறுதியானது தான்.
எப்போது தளபதி 67 அப்டேட்..?
ரசிகர்கள் அனைவரும் எப்போது தளபதி 67 படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான சூப்பரான ஒரு அப்டேட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.
மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது “படத்தின் தலைப்பை பற்றி நான் பேசக்கூடாது. ஒரு சின்ன குறிப்பு மட்டும் குடுக்குறேன் அதை மட்டும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் அப்டேட் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வரும்” என கூறியுள்ளார்.
மைக்கல் :
இயக்குனர்ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படக்குழு கோவையில் உள்ள தனியார் கல்லூருக்கு சென்றுள்ளனர். அங்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைக்கப்பட்டு இருக்கிறார். அங்குதான் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் (தளபதி 67) குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…