நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்தை லலீத் குமார் தயாரிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், உறுதியான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது தான் தளபதி 67 அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்த நிலையில், தளபதி 67 படத்தின் ரிலீஸ் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள், படம் எப்போது தொடங்கவுள்ளது என்பது குறித்து சுவாரசிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம்.
இதையும் படியுங்களேன்- வா மச்சானே…வா மச்சானே..மேடையில் குத்தாட்டம் ஆடிய தர்ஷா குப்தா.! வைரலாகும் வீடியோ…!
இந்த படத்தில் மொத்தம் 6 பெரிய நடிகர்கள் வில்லன்களாக நடிக்கவுள்ளாராம். அதில் சஞ்சய் தத், பிருத்விராஜ், ஏற்கனவே உறுதியாகிவிட்டதாம். இந்த லிஸ்டில் மூன்றாவதாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளராம். படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.
இந்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு ஆயுத பூஜை அன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. கோப்ரா படம் வெளியான பிறகு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீடுவார்கள் என கூறப்படுகிறது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…