தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர்.  படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோ, ஓ.எம்.ஆரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யின் லுக் வெளியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு அரங்குகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தி விறு விறுப்பாக படப்பிடிப்பை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு தளபதி 66 பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியீடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த படத்தின் டைட்டில் இது தான் என ஒரு தகவல் பரவிவருகிறது .

அது என்னவென்றால், படத்திற்கு “வாரிசு” என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளார்களாம். இந்த டைட்டிலை தவிர்த்து மொத்தம் 15 டைட்டில்கள் முடிவு செய்து வைத்துள்ளார்களாம் . இதில் வாரிசு என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்ப தகுந்த சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றார்கள். எந்த டைட்டில் வரும் என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago