தலைவர் 169 இயக்குனர் நான்தான்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்..!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்தாக ரஜினியின் 169-வது படத்தை இயக்கவுள்ளார்.
ஆனால், கடந்த சில நாட்களாவே சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் தொடர்ந்து வருவதால், நெல்சன் அடுத்தாக தலைவர் 169 படத்தை இயக்கமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை ரஜினி தேர்வு செய்வார் எனவும் செய்திகள் பரவி வந்தது.
இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெல்சன் தனது ட்வீட்டர் பக்கத்தின் முகப்புபக்கத்தில் தலைவர் 169 இயக்குனர் என்பதை சேர்த்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.