நடிகர் அஜித்தின் மறுமுகம் !

Default Image

தல அஜித் தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி தன்னுடன் பணிபுரியும் அனைவர் மீதும் அதிக அக்கறை கொண்டவர். அதை பல வளர்ந்து வரும் பிரபலங்கள் கூறுகையில் நாம் கேட்டிருக்கிறோம்.

தமிழக மக்களின் அமோக வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் நடித்த சுஹாசினி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், நடிகர் அஜித் அவர்களுடன் 5 நாள் பரமசிவன் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தின் போது அஜித் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை, இப்போது இருப்பது போல்.

ஆனால் அவர் அந்த நேரத்திலேயே தன்னுடன் நடித்த நடிகர்கள் மீது அக்கறை எடுத்துக் கொண்டார். என்னுடைய 5 நாள் படப்பிடிப்பில் 3வது நாளே அஜித் அவர்கள் எனக்கு போன் செய்து என்னுடைய பெயர், எங்கிருந்து வருகிறேன் என்ற விவரங்கள் கேட்டார்.

அவருடைய இடத்தில் இருந்து பார்த்தால் நம் படத்தில் யார் நடித்தால் நமக்கு என்ன என்று இருக்காமல் என்னை பற்றி தெரிந்து கொண்டார் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்