துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் பெற்ற மார்க் என்ன?! என்னென்ன பிரிவுகளில் பங்கேற்றார்?! முழு விவரம் உள்ளே!
சில நாட்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் ஸ்தம்பிக்கும் வண்ணம் துப்பாக்கி சுடுதல் போட்டியை காண கூட்டம் அலைமோதியது. காரணம் தல அஜித் அந்த போட்டியில் கலந்துகொண்டது.
45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், தல அஜித் இரு பிரிவுகளில் போட்டியில் கலந்து கொடுள்ளார். ஒன்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வகை, இன்னொன்று 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் வகை என இரு பிரிவுகளில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் தல அஜித் மொத்தம் 400 மதிப்பெண்களின் 380க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளாராம். இதுநாள் வரை இதற்கென தனி பயிற்சி எடுத்துவரும் போட்டியாளர்களை மிஞ்சும் அளவிற்கு தல அஜித் சிறப்பாக செயல்பட்டு உள்ளாராம்.
இன்றுதான் யார் வெற்றியாளர் பரிசு என விழா நடக்கிறதாம். ஆனால் அஜித் இதில் கலந்துகொள்ளாமல் சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.